ரசிகர்களால் கடுப்பான நடிகர்!


தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருக்கும் தளபதியான நடிகருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்களாம். இந்த ரசிகர்கள் எப்போதுமே இவருக்கு ஆதரவாகவே இருப்பார்களாம். சமீபகாலமாக சமூகத்தளங்களில் இவருடைய ரசிகர்கள் தலயான நடிகரையும், தலயான நடிகரின் ரசிகர்கள் இந்த நடிகரையும் மாறி மாறி திட்டி வருகிறார்களாம்.

இதனை பார்த்த தளபதியான நடிகர் கடுப்பாகிவிட்டாராம். உடனடியாக இதை கட்டுப்படுத்த ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளாராம். சமூக வலைத்தளங்களில் இருக்கும் அனைவரும் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் ஸ்டேட்டஸ் போடவேண்டும். இனிமேலும் வலைத்தளங்களில் வன்முறை தொடர்ந்தால் வலைதளங்களில் இருந்து நான் வெளியேறி விடுவேன் என்று எச்சரித்துள்ளாராம்.
Previous
This is the oldest page
Thanks for your comment