என்னை அறிந்தால் படம் குறித்து உறுதி செய்யப்படாத செய்தி ஒன்று கடந்த சில நாள்களாக சுற்றிக் கொண்டிருக்கிறது.
படத்தின் கதைப்படி கிளைமாக்ஸில் அஜீத் இறந்துவிடுவதாக கௌதம் எடுக்க விரும்பியதாகவும், என்னுடைய ரசிகர்கள் நான் இறந்து போவதை விரும்ப மாட்டார்கள் என அஜீத் அதற்கு மறுத்ததாகவும் ஊடகங்களில் செய்தி வந்தது.
இதன் தொடர்ச்சியாக, அஜீத் இறந்துவிடுவது போன்றும், உயிர் பிழைத்துக் கொள்வதாகவும் இரு கிளைமாக்ஸ் எடுக்கப்பட்டிருப்பதாக அதே ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இரண்டு கிளைமாக்ஸ் எடுப்பது கௌதமுக்கு புதிதல்ல. விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு இரு கிளைமாக்ஸ்கள் எடுக்கப்பட்டன.
ஆனால், படயூனிட் வேறு மாதிரி கூறுகிறது. இப்போது வரும் எந்த வதந்தியும் உண்மையில்லை. யார் சொல்வதையும் நம்பாதீர்கள் என அவர்கள் கூறுகின்றனர்.
ஜனவரி 29 படம் வெளியாகும்வரை என்னை அறிந்தால் குறித்து பரப்பப்படும் வதந்திகளுக்கு ரசிகர்கள் செவி கொடுக்காமல் இருப்பதே நல்லது.
Show Konversi KodeHide Konversi Kode Show EmoticonHide Emoticon