குள்ளமான ஆண்கள் 'அதுல' பலே கில்லாடிகள் : ஆய்வு சொல்கிறது


குட்டையான ஆண்கள் செக்ஸ் விஷயத்தில் பலே கில்லாடிகளாக இருப்பார்கள் என்கிறது ஒரு புது ஆய்வு. டிஸ்கவர் மருத்துவ பத்திரிகையில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வின் முடிவில் இதுகுறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. கள்ளனை நம்பினாலும், குள்ளமான ஆட்களை நம்ப கூடாது என்ற நம்மூர் கிராமத்து பழமொழி, இந்த விஷயத்துக்கும் பொருந்தும்போல இருக்கிறது.


நூற்றுக்கணக்கான ஆண்கள்

மருத்துவ பத்திரிகையின் ஆய்வு குழு, 20 முதல் 54 வயதுக்குட்பட்ட 531 ஆண்களை ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்களிடம், செக்ஸ் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலை பெற்றுள்ளது.


அதிக உடலுறவு

இந்த பதிலின் அடிப்படையில் குட்டையான ஆண்கள் சராசரியாக அதிகமுறை உடலுறவு கொள்வதாக தெரியவந்துள்ளது.

வாரத்தில் மூன்றரை நாள்

5 அடி 9 இன்ச்சுக்கும் குறைவான உயரமுள்ள ஆண்கள், சராசரியாக வாரத்தில் மூன்றரை நாட்களுக்கு மேல், உடலுறவு வைத்துக்கொள்கிறார்களாம். உயரத்தில் ஆறடியை தாண்டியவர்கள் இதைவிட குறைவாகவே உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள்.

ஆரோக்கியம் முக்கியம்

உடல் பருமன், நீரிழிவு போன்ற வியாதிகள் செக்ஸ் வாழ்க்கைக்கு உலை வைக்கும் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே உடல் பருமனை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Previous
Next Post »
Thanks for your comment