தயாரிப்பாளருடன் திரிஷாவுக்கு காதல் மலர்ந்தது எப்படி?


நடிகை திரிஷா, பட தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்ய உள்ளார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. லேசா லேசா, கில்லி, திருப்பாச்சி, மங்காத்தா, மன்மதன் அம்பு உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் திரிஷா. இவருக்கும் வாயை மூடி பேசவும், காவிய தலைவன் படங்களின் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த¢தம் நடந்துள்ளது. இவர் கட்டுமான நிறுவனமும் நடத்தி வருகிறார். சென்னை செனடாப் சாலையில் உள்ள திரிஷா இல்லத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இருவரின் திருமண நிச்சயதார்த்தம் பற்றி சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு முன் தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வந்தார் திரிஷா. கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதற்கு முக்கிய காரணம், கன்னட நடிகை ராகினி திவேதி என கூறப்படுகிறது. கன்னட படங்களில் நமிதாவை போல் கவர்ச்சியாக நடித்து வருகிறார் ராகினி. அவரிடம் ராணா நெருங்கி பழகியதால் திரிஷா தனது காதலை முறித்துக் கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் திரிஷா&ராணா பிரிவுக்கு தான் காரணம் கிடையாது என ராகினி மறுத்து வந்தார். இந்நிலையில்தான் திடீரென தயாரிப்பாளர் வருண் மணியனை கரம் பிடிக்க திரிஷா முடிவு செய்திருக்கிறார்.காதல் மலர்ந்தது எப்படி? திரிஷா ஒரு பார்ட்டி பறவை. ஷூட்டிங் இல்லாத நாட்களில் நைட் பார்ட்டிகளுக்கு சென்றுவிடுவார். அப்படி போகும்போது பாலிவுட்டிலும் நடிக்கும் தமிழ் சினிமா இளம் ஹீரோ ஒருவர் மூலமாக வருண் மணியனை அவர் சந்தித்துள்ளார். முதல் சந்திப்பிலேயே இருவருக்குள் நட்பு மலர்ந்தது. அடுத்தடுத்த சந்திப்புகளில் அது காதலாக மலர்ந்ததாக திரிஷாவுக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

காதலை வெளிப்படுத்திய விதத்தில் திரிஷாவை வருண் இம்ப்ரஸ் செய்துவிட்டதாகவும் உடனே அவரை திருமணம் செய்யும் முடிவுக்கு திரிஷா வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த காதலுக்கு அந்த இளம் ஹீரோவும் அவரது நண்பரான 2 முறை காதலில் தோற்ற மற்றொரு ஹீரோவும் உறுதுணையாக இருந்தார்களாம். இது குறித்து சமூக வலைதளத்தில் திரிஷா கூறுகையில், இந்த விஷயம் (வருண் மணியனுடன் காதல்) பற்றி இப்போதைக்கு பதில் சொல்வது பொருத்தமானதாக இருக்காது என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். திரிஷா தற்போது 4 படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்களின் வியாபாரம் பாதிக்கும் என்பதாலேயே காதல், திருமண விவகாரத்தை பற்றி பேச அவர் தயங்குவதாக சொல்லப்படுகிறது. நடிக்கும் படங்களை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் திருமணம் செய்வார் என்றும் திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்றும் திரிஷா தரப்பில் சொல்லப்படுகிறது.
Previous
Next Post »
Thanks for your comment