பெண்களுக்கு எந்த மாதிரி ஆண்களை பிடிக்கும்?

பெண்களை கவர்வதற்கு ஆண்கள் என்னென்ன முயற்சிகள் எல்லாமோ செய்வது உண்டு. அவர்கள் இப்படி கஷ்டப்பட வேண்டாம். எந்த மாதிரி ஆண்களை, பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆய்வு ஒன்றை நடத்தி தகவல் வெளியிட்டு உள்ளனர். அதை மட்டும் பின்பற்றினால் போதும்

ஆய்வு நிறுவனம் ஒன்று இது பற்றி இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ், ஆகிய நாடுகளில் இது பற்றி ஆய்வு நடத்தியது.

இதில் நன்கு முகச்சவரம் செய்திருந்த ஆண்களையே எங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறினார்கள். அதே போல தலைமுடியை நன்கு சுத்தம் செய்து அலங்காரம் செய்து இருப்பவர்களையும் பிடிக்கும் என்றனர். புதர்போல தாடி வைத்து இருப்பவர்களை பிடிக்காது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருந்தது.

ஆனால் முகச்சவரம் செய்த பின் அடுத்த ஒன்றி ரண்டு நாட்களில் கொஞ்சமாக முடி முளைத்து இருக்கும் ஆண்கள் “செக்ஸ்” ரீதியாக கவர்வதாக அதிக அளவு பெண்கள் தெரிவித்தனர். இதில் மும்பையை சேர்ந்த 64 சதவீத பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் மீது தங்களுக்கு “செக்ஸ்” ஆர்வம் இருப்பதாக தெரிவித்தனர்.

சென்னையை சேர்ந்த 83 சதவீத பெண்களும் மும்பையை சேர்ந்த 72 சதவீத பெண்களும், நன்கு முகச்சவரம் செய்த ஆண்களுக்கே முத்தம் கொடுக்க விரும்புவதாக தெரிவித்தனர்.
Previous
Next Post »
Thanks for your comment