என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...!!! கலாய்க்கபடும் லட்சுமி ராமகிருஷ்ணன்......

பர்ஸ்ட் பிரேம் என்ற நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று பெயர் வைத்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணனை நேரடியாக கலாய்க்கும் டயலாக் இது.

அது என்ன விவகாரம் என்று புரியாதவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்.

ஸீ தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வெளிச்சமிட்டு காட்டும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

அதில் கலந்து கொள்ளும் பெண்களைப் பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி சொல்லும் வார்த்தைதான் இந்த, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.

விஜய் தொலைக்காட்சியில் இந்த டயலாக்கை கிண்டல் செய்து ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை ஒளிபரப்ப, லட்சுமி ராமகிருஷ்ணனின், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா பிரபலமானது. இப்போது அதையே ஒரு படத்தின் பெயராகவும் வைத்திருக்கின்றனர்.

கங்காதரன் என்ற புதியவர் இயக்கும் இந்தப் படத்தில் புதுமுகங்கள் நடிக்கின்றனர்.
Previous
Next Post »
Thanks for your comment